இளம் வீரர்களுக்கு வழிவிட்ட டோனி: எப்படி தெரியுமா? VIDEO
இந்திய அணியின் சிறந்த தலைவர்களில் ஒருவராக உள்ளவர் டோனி இவர் தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கிண்ணம், மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிரோபி மற்றும் 50 ஓவர் உலகக் கிண்ணம் என மூன்று வகையான உலகக் கிண்ணங்களை வென்று சாதித்துள்ளது.
இப்படி தலைவராக சாதித்துள்ள டோனி, பல இளம் வீரர்களை முன்னணி வீரர்களாகவும் மாற்றியுள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு டி20-யின் முதல் போட்டியில் விளையாடிய டோனி, தற்போது வரை மொத்தம் 88 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஆனால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் தான் தன்னுடைய இரண்டாவது அரைசதத்தை அடித்தார்மிக குறுகிய போட்டி என்பதாலும், பெரும்பாலும் இளம் வீரர்களுக்கு வழி கொடுத்து கடைசி நேரத்தில் மட்டும் துடுப்பாட்டம் செய்யும் வாய்ப்பு கிடைப்பதால் டோனிக்கு தற்போது தான் 2-வது அரை சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சமீபகாலமாக டோனி ஆட்டம் மந்தமாக உள்ளது என்று பலர் கூறி வரும் நிலையில்அதற்கு எல்லாம் பதிலடிகொடுக்கும் வகையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் வெறும் 28 பந்தில் 3 சிக்ஸர் 4 பவுண்டரி 52 ஓட்டங்கள் எடுத்து அதிரடி காட்டினார்.
இவர் கடைசியாக 65 போட்டிகளில் அரைசதம் அடிக்கவில்லை, அதோடு கடைசி12போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் 2 ஓட்டங்கள் மட்டும் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment