சக வீரரை கடுமையாக விமர்சித்த அஸ்வின் ஷாக்கான ரசிகர்கள்
தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் கிப்ஸுடன், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் டுவிட்டரில் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது டுவிட்டர் பக்கத்தில் நைக் ஷூ விளம்பர டுவீட்டை பதிவிட்டு, இது மிக அற்புதமான ரன்னிங் ஷூ என பாராட்டினார்இ தற்கு கிண்டலாக பதிலளித்த கிப்ஸ், இப்போது இன்னும் வேகமாக ஓடுவீர்கள் என பதில் பதிவிட்டார்.
அதற்கு பதிலடி அளிக்கும் விதத்தில் டுவீட் செய்த அஸ்வின், நிச்சயமாக உங்களை போல வேகமாக என்னால் ஓட முடியாது, உங்களை போல நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் அல்ல.
ஆனால் எனக்கு உணவுகள் தரும் தொழிலில் மேட்ச்சுகளை பிக்சிங் செய்யக்கூடாது என்கிற நன்னடத்தை நெறிகள் கொண்டு நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன் என பதிவிட்டார்.
தென் ஆப்பிரிக்க முன்னாள் தலைவர் ஹான்சி குரேனேவுடன் இணைந்து மேட்ச் பிக்சிங் செய்ததாக கிப்ஸ் மீது புகார் உண்டு, இதை குத்தி காட்டும் வகையிலேயே அஸ்வின் டுவீட் போட்டுள்ளார்.
இதை மேலும் பெரிதாக்க விரும்பாத கிப்ஸ், என் நகைச்சுவை உணர்வை நீங்கள் புரிந்துகொள்ளவில்லைஇதிலிருந்து விலகி கொள்கிறேன் என கூறி முடித்து கொண்டார்அ ஸ்வினின் செயலுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Comments
Post a Comment