மக்களின் கேப்டன் தோனி ஒரு பிளாஷ்பேக் !

ஓர் அணியில் உலகின் தலைச் சிறந்த வீரரை வைத்துக்கொண்டு இருப்பது பெருமையாக வேண்டுமானால் இருக்கலாம் ஆனால் அந்த வீரரை வைத்து உலகக் கோப்பையெல்லாம் வெல்ல முடியாது அதற்கு தனித் திறமையும் தலைமைப் பண்பும் முக்கியம் என்ற கருத்து கிரிக்கெட் விமர்சகர்களால் பெரும்பாலும் சொல்லப்படுவதுண்டு.

அதுவும், இந்திய கிரிக்கெட் அணி2007 ஆம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பு வரை மேலே சொன்ன வாசகத்தை இந்திய அணி வீரர்களே அதிகம் கேட்டிருக்கக் கூடும் அந்த வாசகங்களுக்கு ஏற்றார் போலஅமைந்தார் மகேந்திர சிங் தோனி தோனி மிகச்சிறந்த உலகத் தரம்வாய்ந்த பேட்டிங் நுணுக்கங்கள் கொண்ட.

வீரர்கிடையாதுகிரிக்கெட்புத்தகங்களில்உள்ளஷாட்ஸ்அவரிடம்ல்லை ஆனால்அவருக்கெனபேட்டிங்கில்பிரத்யேகபாணியை கடைப்பிடித்தார் அதேபோல 2007.

ஆம் ஆண்டு தொடங்கி ஏறக்குறைய 9 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்அணிக்குகேப்டனாக பொறுப்பு வகித்த எம்.எஸ்.தோனி அதிலும் தனித்தன்மை கொண்டவராக இருந்தார்.

மேலும், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டனாக விளங்கினார் என்றார் மிகையில்லை கபில் தேவ், அஸாருதீன், சவுரவ் கங்குலி ஆகியோருடன் ஒப்பிட்டால் தோனியே சிறந்த கேப்டனாக விளங்கினார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்திய அனைத்து போட்டிகளிலும் இந்திய அணிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்த பெருமை தோனியின் அணியை மட்டுமே சேரும் 20 ஓவர் கிரிக்கெட் உலக் கோப்பை ஆசியக் கோப்பை 50 ஓவர் உலகக் கோப்பைசாம்பியன்ஸ் கோப்பை என தோனி தொட்டதெல்லாம் பொன்னான காலம் இந்திய அணியின் பொற்காலம்.

சச்சினின்பார்வைமேற்குஇந்தியத் தீவுகளில்07ஆம்ஆண்டுஓவர்உலககோப்பைபோக்குராகுல்டிராவிட்தலைமையிலான இந்திய அணிச் சென்று லீக் சுற்றுகளிலேயே.

தோல்வியடைந்து வெளியேறியது இதனையடுத்து டிராவிட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் அப்போது, முதல் முறையாக 20 ஓவர் கிரிக்கெட் உலக் கோப்பை நடைபெற இருந்தது.

அப்போது இந்திய அணிக்கு தோனி புதியவர் எனினும், அவரது அதிரடிஆட்டம் மூலம்ஏற்கனவேதனி கவனம்பெற்றவராய் இருந்தார் பிசிசிஐ தேர்வுக் குழுவினர் சச்சின் தலைமையில் 20 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு அணியை அனுப்ப தீர்மானித்தனர் ஆனால்சச்சினோ 20 ஓவர் கிரிக்கெட் என்பது இளைஞர்களுக்கானது.

எனவே 20 ஓவர் கிரிக்கெட்டில் தான் விளையாட விரும்பவில்லை எனக் கூறி ஒதுங்கினார் அப்போது யார்தலைமையில் அணியை அனுப்பவது என பிசிசிஐ குழம்பியபோது சச்சின் கைகாட்டியது மகேந்திர சிங் தோனியை. அதன் பின், கேப்டன் ஆனதும் கோப்பைகளை வென்று குவித்ததெல்லாம் எல்லாம் வரலாறு.

இந்திய அணிக்கு எப்போதும் பெரும் பிரச்சனையாக இருப்பது விக்கெட் கீப்பர்களை தேர்ந்தெடுப்பதுதான். 1980-களில் சையத் கிர்மானிக்கு பிறகு 1990- களில் நயன் மோங்கியா சிறந்த கீப்பராக விளங்கினர். 1998-க்கு பின்பு இந்திய கிரிக்கெட் அணி 10 ஆண்டுகள் நிலையான விக்கெட் கீப்பர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.

இடைப்பட்ட காலத்தில் சபா கரீம் தீப் தாஸ்குப்தா விஜய் தாஹியா, அஜய் ராத்ரா பார்த்திவ் பட்டேல் என விக்கெட் கீப்பர்கள் வந்து போனார்கள் இதில் கொடுமை என்னவென்றால் அணியின் பல சுமைகளை தாங்கி வந்த ராகுல் டிராவிட் வேண்டா வெருப்பாக விக்கெட் கீப்பிங் பணியையும் பார்த்து வந்தார்.

பின்பு தினேஷ் கார்த்திக் உத்வேகமான விக்கெட் கீப்பராக அணிக்கு வந்தார், விக்கெட் கீப்பிங்கில் சிறந்து விலங்கினாலும் பேட்டிங்களில் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. அப்போதுதான் தோனி அணிக்கு வந்து.

அதிரடி காட்டினார். அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த கங்குலி ஒரு நாள் போட்டிகளுக்கு தோனியும், டெஸ்ட் போட்டிகளுக்கு தினேஷ் கார்த்திக்கும் கீப்பர்களாகப்பட்டார்கள் ஆனால் தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கும் கீப்பரானார் தோனி.

பாரபட்சமா தோனி மிகச்சிறந்த கேப்டனாக இருந்தாலும் அவர் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல முக்கியமாக அணியில் சீனியர் வீரர்களான கவுதம் காம்பீர், யுவராஜ் சிங், விரேந்திர சேவாக்.

ஜாகிர் கான், ஹர்பஜன் சிங் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு தோனிதான் காரணம் என் சொல்லப்படுவதுண்டு தோனி இந்திய கிரிக்கெட்அணிக்கு கேப்டனாக.

பொறுப்பேற்றசிலஆண்டுகளிலேயேஅவருக்கெனவிதமுறைகளைவகுத்துக்கொண்டார் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் பெர்பார்மன்ஸ் இல்லையென்றால் அணியில் இருந்து தூக்கப்படுவர் அதில் தயவுதாட்சன்யம் காட்டவே இல்லை.

அவருக்கு பதில் வேறு அவரும் இல்லையென்றால் வேறு வேறு என சென்றுக்கொண்டிருந்தார் அதன் பலனாகத்தான் அஷ்வின், கோஹ்லி ரோகித் சர்மா ரஹானே ஜஸ்ப்ரீத் பும்ரா முகமது சமி போன்ற வீரர்கள் இந்திய அணிக்குகிடைத்தார்கள்..

அடி சறுக்கியது mதோனியின் இந்திய கிரிக்கெட் அணி பல வெற்றிகளையும் சில தோல்விகளையும் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி வரை பெற்று வந்தது அதன் பின் தோனியின் அணி பெரிய வெற்றியை பெறவில்லை. வங்கதேசம் உடனான ஒருநாள் போட்டிகளில் கூட தோல்வியை தழுவியது இந்திய கிரிக்கெட் அணி. அதன் பின் அவ்வப்போது சீறி எழும் இந்திய கிரிக்கெட் அணி 2016 ஆம் ஆண்டு20ஓவர்கிரிக்கெட்போட்டியின் இறுதி ஆட்டம் வரை சென்றது. ஆனால், சொந்த மண்ணிலேயே மேற்கு

இந்தியத் தீவிடம்தோற்றது முன்புபோல வேகமான முடிவுகளை எடுக்க தோனி தயங்குகிறார்முன்புபோலஅவரால் வேகமாக செயலாற்ற முடியவில்லைஎன்று பல்வேறுவிமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன..

டெஸ்ட், ஒரு நாள், 20 ஓவர் போட்டிகள் கொண்ட அணிகள் கோலி கைக்கு சென்றுவிட்டது இப்போது தோனி அணியில் ஒரு வீரராக, தான் எந்த வரிசையில் இறக்கிவிடப்படுவோம் என்று கூட தெரியாமல் இருந்துக்கொண்டிருக்கிறார்.

டெஸ்ட், ஒரு நாள், 20 ஓவர் போட்டிகள் கொண்ட அணிகள் கோலி கைக்கு சென்றுவிட்டது இப்போது தோனி அணியில் ஒரு வீரராக, தான் எந்த வரிசையில் இறக்கிவிடப்படுவோம் என்று கூட தெரியாமல் இருந்துக்கொண்டிருக்கிறார்..

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்