வாய்ப்புக்காகக் காத்திருத்தல் கடினமாக உள்ளது: மனம் திறக்கும் மணீஷ் பாண்டே
அணியில் நிரந்தர இடம் பிடிப்பதற்கு என்ன தேவையோ அது தன்னிடம்ருக்கிறதுஎன்றபோதிலும்ஆங்காங்கே எப்போதாவது வாய்ப்புகள் கிடைக்கும் போது அதற்காகக் காத்திருத்தல் கடினமாக உள்ளது என்று மணீஷ் பாண்டே தெரிவித்துள்ளார்நேற்று இந்தியா தோற்ற போட்டியில் 45/3 என்று அணி தடுமாறிய போது 48 பந்துகளில் 78 ரன்களை அடித்தார் தோனியுடன் ஒரு அருமையான கூட்டணி அமைத்தார்.
ஒவ்வொரு முறை வாய்ப்பளிக்கப்படும் போதும் அவர் ஓரளவுக்கு சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்ஆஸ்திரேலிய மண்ணில் 300 ரன்களுக்கு மேலான இலக்கை தனி நபராக வென்று கொடுத்தார், ஆனாலும் அவரை அணியில் தேர்வு செய்வதற்கான லாபி இ ன்ன மும் அவருக்கு அமையவில்லை ஒருநாள் தொடர் முழுதும் பெஞ்சில் அமர வைக்கப்ப ட்டார்ஊதி ப்பெரு க்கப்ப ட்ட ஷ்ரேயஸ் ஐயருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது, இங்கு அனுபவம் என்ற சொல்லாடல் முன்னுரிமை பெற வில்லை.
இந்நிலையில் நேற்று போட்டி முடிந்த பிறகு பாண்டே கூறும்போது, நேர்மையாகக் கூற வேண்டுமெனில் வாய்ப்பு களுக்காகக் காத்திருப்பது கடினமாக உள்ளது. இது நம் மனத்தை அரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக இந்தத் தொடரில் மனச்சஞ்சலம் அதிகம் இருந்ததுஆனால் இதுதான் கிரிக்கெட் என்பதும் அணியில் நிறைய நட்சத்திர வீரர்கள் இருக்கும் போது நம் வாய்ப்புக்காக நாம் காத்திருந்து அணிக்காக பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதெல்லாம் எனக்குப் புரிகிறது4-ம் நிலையில் சில வாய்ப்புகள் கிடைத்தது, நான் நன்றாகச் செயல்பட்டேன் பேட்டிங் சேர்க்கை சில வேளைகளில் என்னை 5-ம் நிலைக்கு இறங்க பணிக்கிறது. இன்னும் சிறப்பாக ஆட வேண்டும், எனக்காக ஆட வேண்டும் என்று நினைக்கிறேன்.
அணியில் சிறப்பான டாப் ஆர்டர் உள்ளன, இவர்கள் 30-35 ஓவர்களை ஆடிவிடுகின்றனர், விராட் கோலி தோனி எனக்கு முன்னா ல் இறங்க வேண்டியுள்ளது எனவே இன்னும் கூடுதல் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் சிறப்பான பங்களிப்பு செய்ய முடியும்இந்திய அணியில் 5-ம் நிலையில் ஆடுவது கடினம், இதற்கு முன்பு ரெய்னா, யுவராஜ் ஆடினர், அவர்கள் இடத்தை நிரப்புவது கடினம். கடந்த 2 ஆண்டுகளாக இந்திய பேட்டிங் சிறப்பாக ஆடிவருகிறது எனவே வாய்ப்புகளுக்காக பொறு மையுடன் காத்திருப்பது அவசியம்முதல் பந்திலிருந்தே அடிக்க வேண்டும் இதைத்தான் முதல் போட்டியில் செய்ய நினை த்தேன் ஆனால் கொஞ்சம் மந்தமான இன்னிங்ஸாகி விட்டது அது. எப்போதும் நான் விளையாடும் பாணியிலேயே தொடர விரும்புகிறேன்.
நேற்று தோனி என்னை தட்டி எழுப்பினார் பின் களத்தில் அவர் சிறந்த வீரர் 2 ஓவர்களை அவர் ஆதிக்கம் செலுத்தினார் முதலில் 170 ரன்கள் இலக்கு போதுமானது என்றே நினைத்தோம் ஆனால் நானும் தோனியும் ஜோடி சேர்ந்த போது இரண்டு உள்விளிம்பில் பட்டு பவுண்டரிகள் சென்றது பிறகு தோனி இரண்டு கிரேட் ஷாட்களை ஆடினார் 188 ரன்களுக்குக் கொண்டு சென்றோம்தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்காக ஆடும் போது கிளாசனை நான் பார்த்திருக்கிறேன் நமக்கு எதிராக சதம் எடுத்தார் அவர் எப்போதும் இப்படித்தான் ஆடுவார்” இவ்வாறு கூறினார் மணீஷ் பாண்டே.

Comments
Post a Comment