தோனிக்காகக் காத்திருக்கும் இன்னொரு டி20 சாதனை!

மகேந்திர சிங் தோனி நிறைய சாதனைகளை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் நிகழ்த்தியுள்ளார். தற்போது இன்னொரு புதிய சாதனையும் அவர் நிகழ்த்துவதற்காகக் காத்திருக்கிறது.

இன்று கேப்டவுன், நியூலேண்ட்ஸ் மைதானத்தில் கடைசி டி20 போட்டிக்காக இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகள் களமிறங்கும் போது இந்தச் சாதனையை தோனி நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 கிரிக்கெட்டில் தோனி இதுவரை49கேட்ச்களைப்பிடித்துள்ளார்இன்னும் ஒரு கேட்சை இன்று பிடித்தால் 50 கேட்ச்களை டி20 கிரிக்கெட்டில் பிடித்த முதல் விக்கேட் கீப்பராவார் தோனி.

இவருக்குப்பின்னால்மேஇதீவுகள் விக்கெட்கீப்பர்தனேஷ்ராம்தின் 32கேட்ச்களுடன்உள்ளார்இவர்இப்போதுஅணியில்தேர்வுசெய்யப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியின் பேட்டிங்கில் ஷாட்களை தூள்கிளப்பிய காலங்கள் சற்று இப்போது மங்கியிருந்தாலும் ரன்களை விரைவில் ஓடி எடுப்பது தவிர விக்கெட் கீப்பிங்கில் இதுவரை அவர் சோடை போனதில்லை என்பது ஒரு மிகப்பெரிய பலமாகும்.

குவிண்டன் டி காக் 30 டி20 விக்கெட் கீப்பிங் கேட்ச்களுடன் இருக்கிறார்.ம்ரன் அக்மல் 32 ஸ்டம்பிங்குகளுடன் முதலிடத்தில் இருக்கிறார், தோனி 29 ஸ்டம்பிங்குகளுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.

ஆனால் மொத்தமாக 79 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் முதலிடத்தில் இருந்து வருகிறார் தோனி, கம்ரன் அக்மல் 60 வீரர்களை ஆட்டமிழக்கச் செய்து 2-ம் இடத்தில் இருக்கிறார்.பேட்டிங்கில் தோனி 88 டி20 சர்வதேச போட்டிகளில் 1,432 ரன்களை 37.68 என்ற சராசரியுடனும் இரண்டேயிரண்டு அரைசதங்களுடனும் எடுத்துள்ளார்.

Comments

Popular posts from this blog

நடிகை ஸ்ரீதேவி காலமானார்!!

போடு தகிட தகிட வைரலாகும் அஜித்தின் புதிய புகைப்படம் வாயை பிளந்த கோலிவுட்